31 August 2010

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்


அஸ்ஸலாமு  அழைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகாத்துஹு   

இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.

                      
   நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)  
                                                                                           

 அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் 
ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று,இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  



அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் {ஆயிஷா(ரலி)}அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன்.இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.

    
அல்லாஹம்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.


                                                                                    
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். 




அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?" என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். 



இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! 



ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல.

                                                             
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள்.

 
"ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்" இப்படி கூறுவதினால் "ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும்.



இந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.


நாம்  அனைவரும்  ஒற்றைப்படை  நாளில் அதிகமாக தொழுது, திகிர் செய்து, குர்ஆன ஓதி  லைலத்துல் கத்ர் சிறப்பை தேடிக்கொள்வோமாக.

              

26 August 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

அஸ்ஸலாமு அழைக்கும்.
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..

23 August 2010

ரமலான் சிறப்பு


அஸ்ஸலாமு   அழைக்கும. 
ரமலான்  மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

21 August 2010

துஆக்களின் சிறப்பு ,

அஸ்ஸலாமு  அழைக்கும்.
                 இறைவனிடம்   கை   ஏந்துங்கள்,                                                              
      நாம்  இறைவனின்  தியானத்தை  தவிர  வேறு  எதிலும் மன  அமைதி  காண  முடியாது .
     அல்லாஹ்வை  நினைவு  கூர்வதை  கொண்டுதான்  இதயங்கள்  அமைதி  பெறுகின்றன
      அல்லாஹ்வை  உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே  தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு  மனதோடு  கேட்கப்படும்  துஆ  தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
     அல்லா  கேட்டதையே  கொடுக்கின்றான் . அல்லது அதைவிட  
சிறந்ததை  கொடுக்கின்றான். அல்லது  அந்த  துஆவைக்   கொண்டு வர 
இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
       நாம்  துஆ  செய்யும்போது இரு கைகளையும்  தோல்,புஜம் வரை உயர்த்தி  முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ 
செய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின்  ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும் 
தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
        துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்  
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
        அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு 
        அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா  
        வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .  
 சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
  1. பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில்   கேட்கப்படும்  துஆ ,
  2.  பர்ளு  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  3.  தஹஜ்ஜ்த்  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  4. சஜ்தாவில்   கேட்கப்படும்  துஆ 
  5. நோன்பு   திறக்கும்  முன்   கேட்கப்படும்  துஆ .  
                                                                          

    17 August 2010

    அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்

    அஸ்ஸலாமு  அழைக்கும் ;
         எல்லாம்  வல்ல  அல்லாஹ்வின்  உதவியால்  ஆரம்பிக்கிறேன் ;
    அல்லாவிற்கு  ஆற்ற  வேண்டிய  கடமைகள் ;
    1 ,  ஈமான் : அல்லாஹ்வை  நம்பிக்கை கொள்வதும் ,நற்செயல்கள் செய்வதும் , அல்லாஹ்வை  நேசிப்பதும் , அவனை  கண்ணியபடுதுவதன்  மூலம்  மனம்  தூய்மையடைகிறது . அல்லாஹ்வின்  மீதுள்ள  நம்பிக்கை  உறுதியடைகிறது .                                                       
    2 . தொழுகை: ஒவ்வொரு  நாளும்  இரவு  பகலில்  ஐநதுவேளை             தொழுகையை  நிலைநாட்ட   வேண்டும் . அதன்  காரணமாக  அல்லா  தவறுகளை  மன்னித்து  அந்தஸ்தை  உயர்த்துகிறான் .இதயததைவும் ,
    சூழ்நிலைகளைவும்   சீற்படுதுகிறான். இந்த  நல்ல  அமலை   அடியான்
    இயன்றவகையில்  நிறை  வேற்றிய ஆக்க  வேண்டும் .
             அல்லாஹ்வுக்கு  பயந்து , அவனுக்கு  செவிசாய்த்து , வழிபட்டு  நடந்து , தானமும்  செய்யுங்கள் .எவர்கள்  கஞ்சததனத்திலிருந்து , பாதுகாக்கபட்டார்களோ , அத்தகையோர்  நிச்சயமாக  வெற்றியடைந்து  விடுவார்கள் . {அல்குர்ஆன  64 ;16 }
            
    நபி {ஸல்} அவர்கள், இம்ரான்  இப்னு  ஹுசைன் {ரலி }நோய் வாய்ப்ட்டிந்தபோது  கூறினார்கள்; நின்ற  நிலையில்  நீர்  தொழுது  கொள்வீராக, உமக்கு  இயலவில்லை என்றால், உட்காந்த  நிலையில், அதுவும்  உமக்கு  இயலாவிட்டால்  படுத்த  நிலையில்  தொழுது  கொள்வீராக .நூல்;  புகாரி

    3 . ஜகாத் ; அது  உனது  செல்வத்தின்   சிறு   பகுதியாகும் . அதை   முஸ்லீம்களில்  வறியவர்களுக்கும் ,ஏழைகளுக்கும் ,கடனில்   மூழ்கியவருக்கும் ,வலிபோக்கர்களுக்கும்,  ஜகாத் வாங்க  தகுதி  பெற்ற,
    அனைவருக்கும்  வழங்க  வேண்டும் .

    4 .நோன்பு ; வருடத்தில்  ஒரு  மாதம் {ரமலான் மாதம் }நோன்பு  நோற்பது .
        எவரேனும்  நோயாளியாகயோ அல்லது  பிரயாணத்திலோ  இருந்தால் ,   
        {ரமலான்  அல்லாத}  மற்ற் நாட்களில்  {விட்டு  போன நோன்பை }
         கணக்கிட்டு  நோற்று விடவும் .{அல்குர்ஆன  2 ;185}
         நிரந்தரமாக  பலவீனமடைந்த நோன்பு நோற்க  சக்தியற்றவர்,
        ஓவ்வொரு  நோன்புக்கும்  பகரமாக  ஒரு  ஏழைக்கு  உணவளிக்க   வேண்டும்.

    5 . ஹஜ் : வசதி  பெற்றவர்கள்   வாழ்வில்  ஒரு  முறை  ஹஜ்  செய்வது .

         இந்த  ஐந்தும்  அல்லாஹ்வுக்கு  நிறைவேற்ற  வேண்டிய  கட்டாய  கடமையாகும் .